Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

இயக்குனர் சுசீந்திரனின் ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் திறமையான இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கத்தில், City Light Pictures தயாரிப்பில் உருவாகியிருக்கும் “2K லவ்ஸ்டோரி” திரைப்படம் இன்றைய நவநாகரிக இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ளது. ரொமான்ஸ் வகையைச் சேர்ந்த இப்படம், 2K தலைமுறையின் காதல், நட்பு போன்ற பல அம்சங்களை அழகாக வெளிப்படுத்துகிறது.

வெட்டிங் போட்டோஃகிராஃபி செய்யும் ஒரு குழுவின் இளைஞர்கள் சந்திக்கும் அனுபவங்களை மையமாகக் கொண்டு, அனைவரையும் ஈர்க்கும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இது, இயக்குனர் சுசீந்திரனும் டி. இமானும் இணைந்து பணியாற்றும் 10-வது திரைப்படமாகும்.

புதிய முகமான ஜெகவீர் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார், மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

“2K லவ்ஸ்டோரி” படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது. டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பின்னணி பாடகர் தெருக்குரல் அறிவு பாடிய “How Is It Possible Bro?” என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News