மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற துடரும் படத்தை பார்த்த இயக்குநர் செல்வராகவன் படக்குழு மற்றும் மோகன்லாலை பாராட்டியுள்ளார். ” மிகவும் பிரமாதமான திரைப்படம் துடரும். இப்படத்தை மோகன்லாலை தவிர்த்து வேறு யாராலையும் நடித்திருக்க இயலாது. எம்மாதிரியான நடிகன்! இந்தியாவின் சிறந்த நடிகர் மோகன்லால்” என புகழ்ந்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
