ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘அமரன்’. இதில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரமரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து, நடிகர் தனுஷின் 55வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்தப் படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
அதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரியஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி ஒரு பான் இந்தியா படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’, ‘அனிமல்’, ‘கபீர் சிங்’, ‘ஆதிபுருஷ்’ போன்ற பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.