பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது, தனுஷ் இயக்கி நடித்துள்ள ”இட்லி கடை” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ”அறிவு” என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், பார்த்திபன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ”நண்பர்களே.. இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்!!! என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் இயக்கி நடிக்கும் ‘நான் தான் CM’ 26 Onwards படத்தின் போஸ்டர்-ஐ வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.