ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் “சிங்கிள் பசங்க” எனும் ஒரு புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடுவர் குழுவாக, பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா, பிக் பாஸ் புகழ் ஸ்ருதிகா அர்ஜுன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்த 10 நபர்கள் பங்கேற்கவுள்ளனர். அவர்களின் குழு நடவடிக்கை, நடிப்பு திறன், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமான பல்வேறு போட்டிகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவிருக்கின்றன.
பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சியை நடிகை மணிமேகலை தொகுத்து வழங்கவுள்ளார். இதனால், இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.