Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

மறைந்த நடிகை சௌந்தர்யாவின் நினைவு நாளை முன்னிட்டு கவிதை எழுதி நினைவுகூர்ந்த இயக்குனர் பார்த்திபன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனது எக்ஸ் பக்கத்தில், நடிகை சௌந்தர்யாவின் நினைவு நாளை முன்னிட்டு அவர் குறித்து கவிதை எழுதியுள்ளார். சௌந்தர்யாவின் நினைவு நாள் ஏப்ரல் 17ஆம் தேதி என்றாலும், அவர் இன்று அவரது நினைவு குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது, ” மறக்கத்தான் நினைக்கிறேன்
மறந்தால் தானே நினைப்பதற்கு?
மறைந்தால் தானே அழுவதற்கு?
இருக்கும் போதே மறைந்துப் போகிற உறவுகளுமுண்டு, போன பின்பும்
மனசோட ஒட்டிகிட்டிருக்க நினைவுகளுமுண்டு!
-இவன்” என பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘இவன்’ படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கவும் செய்திருந்தார் பார்த்திபன். நடிகை சௌந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி விமான விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News