நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது படம் இட்லி கடை. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், தனுஷ் நாயகனாக நடிக்க, ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில், அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். இயக்குனர் பார்த்திபன் அறிவு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். முன்னதாக இப்படத்தில் இருந்து “என்ன சுகம்” என்ற முதல் பாடலும், தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய “எஞ்சாமி தந்தானே” பாடலும் வெளியாகி வைரலாகின.
இப்படத்தின் இசை உரிமையை சரிகமா நிறுவனம் பெற்றுள்ளது. படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில், படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற உள்ளது. அன்றே இட்லி கடை படத்தின் டிரெய்லரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.