பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஓஜி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் தற்போது நடித்து வருவது ‘உஸ்தாத் பகத்சிங்’ திரைப்படம். ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீலீலா மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் பார்த்திபன் இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரது பிறந்தநாளான நேற்று, தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டது.
முன்னதாக 2012ஆம் ஆண்டு ராம் சரண் நடித்த ‘ரச்சா’ திரைப்படத்தில் குறுகிய தோற்றத்தில் தெலுங்கில் அறிமுகமான பார்த்திபன், சுமார் 13 ஆண்டுகள் கழித்து பவன் கல்யாண் படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.