மலையாளத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில், சூப்பர்மேன் கதையை மையமாகக் கொண்ட மின்னல் முரளி என்ற படம் வெளியானது. இந்த படத்தை பஷில் ஜோசப் இயக்கியிருந்தார். அதற்கு முன்னதாக, அவர் குஞ்சி ராமாயணம், கோதா ஆகிய படங்களை இயக்கியிருந்தாலும், மின்னல் முரளி அவரை அதிக அளவில் பிரபலமாக்கியது.
அதன் பிறகு, பஷில் ஜோசப்புக்கு நடிப்புத் துறையில் பல வாய்ப்புகள் வந்தன. காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், தற்போது பல படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். குறிப்பாக, அவரது நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, குருவாயூர் அம்பல நடையில், சமீபத்தில் வெளியான சூட்சும தர்ஷினி உள்ளிட்ட படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன.
தற்போது வெளியாகியுள்ள பிறாவின்கூடு ஷாப்பு என்ற படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பஷில் ஜோசப். இந்த போலீஸ் கதாபாத்திரம், அவருக்கு முதல் முறை என்பதாலோ, அவர் தனது பாணியில் சில தனித்துவங்களைச் சேர்த்துள்ளார்.சிங்கம் படத்தின் சூர்யா அவருடைய இன்ஸ்பிரேஷன் எனக் கருதி, படப்பிடிப்பிற்கு தினமும் சிங்கம் படத்தின் பின்னணி இசையை இயக்கி, அதே நேரத்தில் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் சிறப்பாக வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியிலே அவரே பகிர்ந்தார்.