Tuesday, December 17, 2024

அலங்கு படக்குழுவை பாராட்டி வாழ்த்திய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்! #ALANGU

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அலங்கு திரைப்படம் தமிழக – கேரள எல்லைப் பகுதியில், மருத்துவ கழிவுகள் முதல் விலங்குகளின் எச்ச கழிவுகள் வரை கொட்டப்படும் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம்.புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் இந்த திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘உறுமீன்’ மற்றும் ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்சன் த்ரில்லர் மற்றும் டிராமா வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் குணாநிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தை D. சபரிஷ் மற்றும் S.A. சங்கமித்ரா இணைந்து தயாரித்துள்ளனர். படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெய்லரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.படத்தின் டிரெய்லர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “அலங்கு திரைப்பட குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். படத்தின் டிரெய்லர் மிகவும் சுவாரசியமாகவும் நம்பிக்கை அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News