அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். அவர் மட்டுமே குற்றவாளி என்று போலீசார் மற்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார். அவர், “பெண்களுக்கு அதிக சக்தியும் பலமும் கிடைக்கட்டும். இந்த சம்பவத்திற்குச் சம்பந்தப்பட்ட அனைத்து ஆண்களும் நரகத்தில் அழுகட்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.