இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ‘பீட்சா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.
தற்போது, அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் மே 1ஆம் தேதி, தொழிலாளர் தினத்தன்று வெளியாக உள்ளது.இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, சமீபத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
அவர்கள், சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஆகிய தெய்வங்கள் வழிபட்டனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இதனைப் பார்த்த பக்தர்கள், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.