இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள சிறப்பான தருணத்தை நினைவுகூர்ந்து அவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய, முத்து மற்றும் படையப்பா படத்தில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், அவர் “எங்கள் சினிமாவின் நித்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இன்று கூலி திரைப்படம் வெளியாகியுள்ளது, இது வெறும் திரைப்படமல்ல, இது உங்கள் சாம்ராஜ்யத்தின் கொண்டாட்டம்” என்று பதிவிட்டார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more