ரஜினிகாந்த் நடிப்பில் தா.சே. ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ‘வேட்டையன்’. இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசூல் ரீதியாக சுமாரான வரவேற்பு கிடைத்தது. படம் வெளியானது இரு வாரங்களைக் கடந்த நிலையில், இன்று படக்குழு பத்திரிகையாளர் முன்னிலையில் சக்சஸ் மீட் நடத்தினர்.
சக்சஸ் மீட்டின் முடிவில், இப்படத்தில் பணியாற்றியவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், இயக்குனர் தா.சே. ஞானவேலும் நடிகர், நடிகைகளும் பிரியாணி பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.