தமிழில் ‘இடி மின்னல் காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பாலாஜி மாதவன், தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்-ஐ கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். சிவராஜ்குமாரின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதனை சிவராஜ்குமார் வெளியிட்டார்.

இந்தப் படத்தில் சிவராஜ்குமாருடன் இணைந்து தமிழ் மற்றும் கன்னட திரையுலக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர். அவர்களுடைய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்வெஸ்டிகேஷன் மற்றும் ஆக்சன்கள் கலந்த திரில்லர் வகையில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரித்திக் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சூரஜ் சர்மா, கிருஷ்ணகுமார் மற்றும் பி. சாகர் ஷா இணைந்து தயாரிக்கிறார்கள். சிவராஜ்குமார் இந்தப் படத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் கதை, ஒரு பேருந்து பயணத்தின் போதே நடைபெறும் குற்றச்செயல் மற்றும் அதனுடன் தொடர்புடைய புலனாய்வை மையமாகக் கொண்டது என கூறப்படுகிறது.