தனுஷ் நடித்த பாலிவுட் படம் ‘ராஞ்சனா’. 2013ம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. தற்போது இந்த படத்தை ஈராஸ் மீடியா நிறுவனம் மறு வெளியீடு செய்ய இருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது.இந்த நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு இயக்குனர் ஆனந்த் எல்.ராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது படைப்பாளியின் படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது. படத்தின் பலமே அதன் கிளைமாக்ஸ்தான் அதை வியாபாரத்திற்காக மாற்றுவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
