Touring Talkies
100% Cinema

Wednesday, May 28, 2025

Touring Talkies

‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க திரிப்தி டிம்ரி-க்கு இத்தனை கோடி சம்பளமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் போன்ற வெற்றிப் படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் முதலில் தீபிகா படுகோனே கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் ஏதேனும் காரணத்தால், திடீரென அவர் அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

அதனால், அவருக்கு பதிலாக ‘அனிமல்’ படத்தில் நடித்த திரிப்தி டிம்ரி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், படத்தில் பிரபாஸுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கும், ஒரு பாடலில் பிகினி அணிவதற்கும் அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள திரிப்தி டிம்ரியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர் இந்தப் படத்திற்காக சுமார் ரூ.6 கோடி வரை சம்பளமாகப் பெறுவதாக கூறப்படுகிறது. திரிப்தி டிம்ரி மிகக் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ‘அனிமல்’ படத்துக்குப் பிறகு அவர் மீது இருக்கும் எதிர்பார்ப்பு மற்றும் மார்க்கெட் பெரிதாக உயர்ந்துவிட்டது.

- Advertisement -

Read more

Local News