இயக்குனர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டி நடிப்பில் 2022ல் சுமார் 15 கோடி செலவில் தயாரான ‘காந்தாரா’ படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அந்தப் படத்திற்காக ரிஷப் வாங்கிய சம்பளம் வெறும் 4 கோடி என்கிறார்கள்.ஆனால், தற்போது உருவாகி வரும் ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகமான ‘காந்தாரா சேப்டர் 1’ படத்திற்காக ரிஷப் 100 கோடி வரை சம்பளம் கேட்பதாகவும், லாபத்திலும் குறிப்பிட்ட சதவீதம் பங்கைக் கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட இது அவரது முந்தைய திரைப்பட சம்பளத்திலிருந்து 25 மடங்கு அதிகம் எனப்படுகிறது.
