தெலுங்கில் அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்த திரைப்படம் ‘ஒடேலா-2’ கடந்த ஏப்ரல் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆன்மிகக் கதையமைப்பில் உருவான இந்த படத்தில், தமன்னா ஒரு பெண் சாமியாரின் வேடத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கில் உருவான இப்படம் பின்னர் ஹிந்தி மொழியிலும் வெளியிடப்பட்டது. இப்படத்தின் முதல் பாகம் பெரிதும் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கும் அதே அளவான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டதைவிட, எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான தோல்வியை சந்தித்தது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆன்மிகக் காட்சிகள் இயற்கைக்கு மாறாக இருந்ததாகவும், திரில்லர் பகுதிகள் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.