Saturday, November 9, 2024

நடிகர் சங்கத்தின் பதவியை ஏற்க மறுத்தாரா மோகன்லால்? வெளியான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள திரைப்பட நடிகர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. குறிப்பாக, நடிகர் சங்கச் செயலாளர் சித்திக் மீது பல புகார்கள் இருந்தன. இவ்வாறு குற்றச்சாட்டுகள் முன்பே நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலுக்கு தெரியிருந்த போதும், சம்பந்தப்பட்டவர்களை பற்றி கவலைப்படவில்லை என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனால், மோகன்லால் நடிகர் சங்கத் தலைமைப் பதவியை ராஜினாமா செய்தார், இதையடுத்து சங்க நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.

இச்சூழலில், மலையாள நடிகர் சங்கத்திற்கு தற்காலிக நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது, அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மோகன்லால் மீண்டும் தலைவராக வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் துணைத்தலைவர் ஜெயன சேர்தலா மற்றும் நடிகர் சுரேஷ் கோபி ஆகியோரும் பழைய நிர்வாகிகளுக்கு பதவி வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். இதனால், மோகன்லால் மீண்டும் தலைவராக வருவதற்கான எதிர்பார்ப்பு உருவாகியது.

ஆனால், தலைமைப் பதவியை மீண்டும் ஏற்கவில்லை என்று மோகன்லால் மறுத்ததாக கூறப்படுகிறது. நடிகர் சங்க பிரச்சினைகளால் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகியதால், தனது படங்களில் முழுமையான கவனம் செலுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News