ராஜமவுலி இயக்கும் தெலுங்கு திரைப்படத்திற்காக மகேஷ் பாபு தனது உடல் எடையை குறைத்து, முடிகளை வளர்த்து, தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகை பிரியங்கா சோப்ரா தெலுங்கு திரையுலகுக்கு இந்த படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்ய இருக்கிறார். இவர் ஹாலிவுட் படங்களான பேவாட்ச், இஸ்ன்ட் இட் ரொமாண்டிக், தி ஒயிட் டைகர், தி மேட்ரிக்ஸ் ரெசுரெக்ஷன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் அமேசான் பிரைமில் வெளியான சிட்டாடல் என்ற இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.
தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக இருக்கும்போதும், பிரியங்கா சோப்ரா மகேஷ் பாபுவின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக அவருக்கு ரூ.30 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய திரையுலகில் இதுவரை எந்த நடிகைக்கும் இவ்வளவு பெரிய சம்பளம் வழங்கப்படவில்லை.