சினிமா மற்றும் கார் பந்தய உலகில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள அஜித் குமாரின் சாதனைகளை பாராட்டும் வகையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவரிடம் இருந்து பத்மபூஷண் விருது பெற்றார். இந்த விருது வழங்கும் விழாவில் அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இந்திய அரசின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்மபூஷன் விருதை அஜித் குமார் பெற்றதற்காக, பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று நடிகர் அஜித் குடும்பத்தினருடன் டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலை அருகிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அஜித் குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று விமான நிலையத்தில் அவரை பார்க்க வந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, அவரது காலில் சிறிய அளவிலான அடிபடுதல் ஏற்பட்டதாகவும், அதற்காக பிசியோ சிகிச்சை நடைபெற்று வருகிறது என்பதும் தகவல்களாக வெளியாகியுள்ளது.