Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

துருவ நட்சத்திரம் கண்டிப்பாக வெளியாகும்… சமீபத்தில் எடுக்கப்பட்ட படம் போலவேதான் இருக்கும் – இயக்குனர் கௌதம் மேனன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரிதுவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டன. 2018-ம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தாலும், சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அதன் பின்னர், ரிலீஸ் தேதியைக் குறித்த எந்த ஒரு தகவலும் படக்குழுவினரால் அறிவிக்கப்படவில்லை. தற்போது, ‘துருவ நட்சத்திரம்’ எப்போது வெளியாகும் என ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு கௌதம் மேனன் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கவுதம் வாசுதேவ் மேனனிடம், மதகஜராஜா படம் பல வருடங்கள் கழித்து வெளியானது போல், துருவ நட்சத்திரமும் தாமதமாக வெளியாகுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், “மதகஜராஜா படம் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. தாமதமாக வெளியானாலும், அந்த வகை படங்கள் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெறுகிறது. இது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. துருவ நட்சத்திரம் படம் கண்டிப்பாக வெளியாகும். அந்த படம், இப்பொழுது போன வாரம் எடுக்கப்பட்ட படம் போலவே தெரியும்” எனக் கூறினார்.

- Advertisement -

Read more

Local News