‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமுடன் ‘பைசன் காள மாடன்’ என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் பசுபதி, அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஷ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்தின் அனைத்து படப்பிடிப்பும் ஏற்கனவே முழுமையாக முடிந்துவிட்டது. இப்படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை தினமான அக்டோபர் 17ம் தேதி திரைக்கு வரும் என புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.