எபி அருண் இயக்கத்தில், நடிகர் அர்ஜூன் எழுதியுள்ள கதையை அடிப்படையாகக் கொண்டு துருவ் சர்ஜா, வைபவி சாண்டில்யா மற்றும் பலர் நடித்துள்ள கன்னட திரைப்படம் ‘மார்ட்டின்’ இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. துருவ் சர்ஜா கர்நாடகாவில் மிக பிரபலமான நடிகராக உள்ளார்.

இந்த படம் அனைத்து மாநிலங்களிலும் இன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இப்படத்திற்கு மிகக் குறைவான தியேட்டர்கள் கிடைத்துள்ளன. சென்னையில் கூட மிகச் சில காட்சிகளே வழங்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணமாக ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் நேற்று வெளியானதினால், அதுதான் தமிழகத்தில் பெரும்பாலும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், பெங்களூருவில் ‘வேட்டையன்’ மற்றும் ‘மார்ட்டின்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் தினமும் சுமார் 500 காட்சிகள் வரை தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.