சமீபத்தில் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக தனுஷ் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவியது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கான தொடக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக ஆகாஷ் பாஸ்கரனும் சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தற்போது அஜித் கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். மறுபுறம், தனுஷ் ‘தேரே இஸ்க் மெயின்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பனாரசில் இருக்கிறார்.
இந்நிலையில், இருவரும் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்துக்குப் பிறகு ஒரு நாளை ஒதுக்கி சந்தித்து, இப்படத்தின் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.