சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள “குபேரா” திரைப்படம், முக்கிய கதாபாத்திரங்களில் நாகார்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் மிகவும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், நடிகர் தனுஷ் இப்படத்தின் முதல் பாடலை தனது குரலில் பாடியுள்ளார்.
இதுவரை தனுஷ் நடித்த “குட்டி” மற்றும் “வேங்கை” ஆகிய படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தாலும், “குபேரா” திரைப்படம் மூலம் தான் முதன்முறையாக தனுஷை பாட வைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.