தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சாந்தினி தமிழரசன், தனது திருமண வாழ்க்கை மற்றும் திரைப்பயணத்தை பற்றிப் பேசியுள்ளார். பயர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேட்டி அளித்தபோது, 2018ம் ஆண்டு அவர் திருமணம் செய்து கொண்டதை நினைவுகூர்ந்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158031-1024x822.png)
“நாங்கள் திருமணம் செய்யும் முன்பே, அதற்கான அனைத்துப் பேச்சுகளும் ஒருவேளை முடிந்து விட்டன. அப்போது எனது சில திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் இருந்தன. அவை அதற்கு முன்னதாகவே ரிலீஸாகியிருந்தால், திரைப்பயணத்தில் இன்னும் ஒரு உயரத்திற்கு சென்றிருப்பேனா என்ற எண்ணம் வந்தது. திருமணத்தால் என் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என நினைத்திருந்தேன். அந்த எண்ணத்தால், திருமணத்தை ஓரளவு இன்செக்யூர் என்று நினைத்தேன். ஆனாலும், எனது திருமண வாழ்க்கையை நான் முழுமையாக அனுபவித்தேன்” என்று அவர் தெரிவித்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158033-1024x936.png)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158035-905x1024.png)
“நந்தா எப்போதும் என் கனவுகளுக்கு முழு ஆதரவாக இருந்தார். நான் இன்ஸ்டாகிராமில் கிளாமர் போட்டோஷூட் செய்யும்போதும், அதில் அவர் எந்த எதிர்ப்பும் தெரிவித்ததில்லை. ஆனால், நான் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகாதது எனக்கு வருத்தமளிக்கிறது. திறமை இருந்தாலும், அதற்கேற்ப சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை” என அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.