Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வெற்றிமாறன் இயக்கத்தில் நேரடியாக தமிழில் படம் நடிக்க ஆசை… ஜூனியர் என்டிஆர் உறுதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் கொரட்டல சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் ஜான்வி கபூர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், அனிருத், கலையரசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஜூனியர் என்.டி.ஆர் பேசுகையில், “சென்னை எனக்கு மிகவும் சிறப்பான இடம். அனிருத் படம் குறித்து பல விஷயங்களைச் சொன்னார். நீங்கள் பார்த்தவை அனைத்தையும் மேடையில் நிற்கும் தூண்களே செய்தது. இந்தப் படம் அனைவருக்கும் சிறப்பாக இருக்கும். நடிகர் கலையரசன் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்.  

பாகுபலி படத்திற்குப் பிறகு, மொழி வேறுபாடு இருந்தாலும், சினிமா எங்களை ஒன்று சேர்த்துள்ளது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல்வுட் என்று தனித் தனியாக எதுவும் கிடையாது. நாம் பல்வேறு மொழிகளைப் பேசினாலும், சினிமா என்ற ஒற்றை வார்த்தை நம்மை இணைத்துள்ளது.  

பிற திரைப்படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் சாதனை படைத்து, சினிமா எங்களைக் ஒன்றிணைத்ததை நிரூபித்துள்ளன. சென்னை, தெலுங்கு திரையுலகின் முதல் படிக்கலாக இருந்து வந்துள்ளது. முழு டோலிவுட்டும் இங்கு தான் ஆரம்பித்தது, என்றார்.  அவரிடம் நேரடியாக தமிழில் படமெப்போது எனக் கேட்டபோது, எனது விருப்பமான இயக்குனர் வெற்றிமாறன் சார் எனக்கு ஒரு படத்தை இயக்கி, அதை நேரடி தமிழ் படமாக உருவாக்கலாம். அதை தெலுங்கில் டப் செய்யலாம் என்றார்.

- Advertisement -

Read more

Local News