Demon Slayer: Kimetsu no Yaiba’ என்ற ஜப்பானிய அனிமேஷன் திரைப்படம் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் திரையிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டர்களில் இப்படம் ஏறக்குறைய ஹவுஸ்புல் ஆகியும், மற்ற தியேட்டர்களிலும் சில காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. ஜப்பானிஸ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது. ஜப்பானில் ஜூலை மாதம் வெளியான இத்திரைப்படம் ஒரே வாரத்தில் 10 பில்லியன் ஜப்பானிய யென்களை வசூலித்தது. தற்போது தமிழ் சினிமா ரசிகர்களும் இப்படத்தைப் பார்க்க பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
