Thursday, October 31, 2024

தாமதமாகும் STR48… சிம்பு போட்ட வேறொரு பிளான்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிம்புவுக்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்றன. இதன் பின்பு கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், இப்படத்தின் முன்னேற்பாடுகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால், சிம்பு ‘தக் லைஃப்’ படத்தில் சேர்ந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதுவரை சிம்பு-48 படத்தைத் தொடங்காமல் இருக்கும் நிலையில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடித்த அவரது 49-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சிம்பு-48 படத்தின் தயாரிப்பிலிருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் விலகியுள்ளதாக தகவல் உள்ளது. படத்தின் பட்ஜெட் மற்றும் நீண்ட கால திட்ட மாறுதல்களால் கமல்ஹாசனின் தயாரிப்பு விலகியுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கும் இப்படத்தை அவர் தனியே தயாரிக்க முடிவு செய்துள்ளார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

- Advertisement -

Read more

Local News