தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது ஹிந்தித் திரையுலகிலும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். விக்கி கவுசலுடன் அவர் நடித்துள்ள “சாவா” திரைப்படம் நேற்று (பிப்ரவரி 14) வெளியானது. மராட்டிய மன்னர் சாம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வரலாற்றுத் திரைப்படமான இதில், ராணி ஏசுபாயாவாக ராஷ்மிகா நடித்துள்ளார்.
பொதுவாகவே ராஷ்மிகாவிற்கு “நேஷனல் கிரஷ்” என்ற அடைமொழி உள்ளது. ஆனால், “இந்த பட்டங்கள் வாழ்க்கையில் எந்த விதத்திலாவது உதவுகின்றனவா?” என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார்.இதுகுறித்து ராஷ்மிகா கூறுகையில், சினிமாவில் கிடைக்கும் பட்டங்கள், பெயர்கள் எல்லாம் வாழ்க்கையில் உதவுவதில்லை. அது ரசிகர்களின் அன்பால் கிடைப்பவை, ஆனால் அவை வெறும் பெயர்களே. எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளை என் இதயத்திற்கு அருகில் வைத்துள்ளேன். அவர்களின் ஆதரவை நம்பியே நான் படங்களில் நடிக்கிறேன்.


ரசிகர்களின் அன்பை எப்போதும் முதன்மையானதாகக் கருதுகிறேன். அவர்களுக்காக எதையும் செய்யத் தயார். தென்னிந்தியா மற்றும் வட இந்தியா இரண்டிலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனக்கு சற்றே கடினமாக இருக்கிறது. ஆனால், ரசிகர்களின் அன்பிற்காக நான் என் தூக்கத்தைப் பொருட்படுத்தாமல் அவர்களை சந்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.