அப்பீட் பிக்சர்ஸ் விக்டர் குமார் தயாரித்துள்ள படம் ‘சரண்டர்’. அறிவழகனின் உதவியாளர் கவுதமன் கணபதி இயக்கி உள்ளார். படத்தின் கதாநாயகனாக தர்ஷன் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தெலுங்கு இசை அமைப்பாளர் விகாஸ் பதீசா தமிழில் முதல் முறையாக இசையமைக்கிறார். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
