ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலம் நடிகை தர்ஷா குப்தா தனது அறிமுகத்தை செய்துகொண்டார். அதன் பின்னர், செந்தூரப்பூவே சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அவை மிகுந்த பிரபலத்தை பெறாததால், இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். அந்த புகைப்படங்கள் கவர்ச்சியாக இருந்ததால், அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இன்ஸ்டாகிராமில் பிரபலமான பிறகு, விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்றார். ஆனால், அங்கு சிறந்து விளங்க முடியாததால், சில நாட்களில் மீண்டும் திரும்பி வந்துவிட்டார். அதன் பிறகு, ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர் ரிஷியின் மனைவியாக நடித்தார்.
அதன்பின், ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்தார். தற்போது அவரது கைவசம் மெடிக்கல் மிராக்கிள் என்ற திரைப்படம் உள்ளது. இந்நிலையில், பீச்சில் எடுத்துக்கொண்ட அவரது கட்டுடலை காட்டும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.