Touring Talkies
100% Cinema

Thursday, August 14, 2025

Touring Talkies

கூலி’ எப்போதும் ஸ்பெஷலான படமாக இருக்கும்…உங்களுடான தருணங்களை எப்போதும் மறக்க முடியாது ரஜினி சார் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். தற்போது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக திகழும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் 170 திரைப்படங்களில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் அவரது 171-வது திரைப்படமாக். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திரையிலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், என்னுடைய திரைப்பயணத்தில் ‘கூலி’ எப்போதும் ஸ்பெஷலான படமாக இருக்கும். ரஜினிகாந்த் சார்., உங்களுடன் இருந்த தருணங்களை எப்போதும் என்னால் மறக்க முடியாது. எங்களை ஊக்குவித்து கொண்டே இருப்பதற்காக நன்றி இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News