Tuesday, January 7, 2025

கூலி படப்பிடிப்பு 70% முடிந்துவிட்டது… கூலி அப்டேட்டுடன் அரசியல் கேள்விகளுக்கு ‘நோ’ சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘வேட்டையன்’ படத்திற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இதற்காக ரஜினிகாந்த் இன்று (ஜனவரி 7) சென்னையில் இருந்து தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்து விட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 13ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும்” என்று கூறினார்.

அப்போது, நிருபர்களில் ஒருவர் அரசியல் தொடர்பான கேள்வி கேட்க முயன்றார். இதைக் கேட்ட ரஜினிகாந்த், சற்று பதட்டமாக, “அரசியல் குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். ஓகே, தேங்க்யூ” என்று கூறிவிட்டு உடனே அங்கிருந்து நகர்ந்தார்.

- Advertisement -

Read more

Local News