கன்னட சினிமாவின் முன்னணி நடிகை ரச்சிதா ராம், சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். 33 வயதான இவர், கன்னட திரை உலகில் ‘டிம்பிள் குயின்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். புனித் ராஜ்குமார், தர்ஷன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்டபோது, திருமணம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ரச்சிதா ராம் பதிலளித்ததாவது: “இன்னும் சில நாட்களில் நான் திருமணம் செய்ய இருக்கிறேன். எனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றேனும் கனவு எனக்கில்லை. வீட்டில் வரன் பார்ப்பது தீவிரமாக நடந்து வருகிறது” என்று கூறினார்.
தற்போது, இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘லேண்ட் லார்ட்’ மற்றும் ‘அயோக்யா-2’ திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.