தெலுங்கில் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ பட இயக்குனர் மகேஷ் குமார் இயக்கத்தில் ராம் பொத்தினேனியின் 22வது படம் உருவாகிறது. இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கின்றார். விவேக், மெர்வின் இசையமைக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட திரையுலகில் உச்ச நடிகரான உபேந்திரா இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
