Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

திரை பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை குவிந்த இரங்கல் செய்தி… விமானப்படை வீரர்களின் மரியாதையோடு விடைப் பெற்றார் டெல்லி கணேஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) உடல் நலக் குறைவினால் சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் தூக்கத்திலேயே காலமானார். இந்திய விமானப் படையில் பணியாற்றிய அவர், கலைத் துறையில் ஈர்ப்பு ஏற்பட்டு, நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், கே. பாலசந்தர் இயக்கிய ‛பட்டினப்பிரவேசம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவர் ஹீரோ, குணச்சித்திரம், நகைச்சுவை போன்ற பல கதாபாத்திரங்களில் கம்பீரமாக நடித்தார், இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் கலந்து கொண்டுள்ளார்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இயக்குநர்கள் சந்தான பாரதி, லிங்குசாமி, வெற்றிமாறன், நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, ஸ்ரீமன், செந்தில், ராதாரவி, ரமேஷ் கண்ணா, மன்சூர் அலிகான், சித்ரா லட்சுமணன், மணிகண்டன், சார்லி, சத்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், தேவயானி உள்ளிட்ட திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தவெக தலைவர் விஜய், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் செய்தி வெளியிட்டனர்.

இன்று (நவ., 11) அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை நடத்தினர். விமானப் படை சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அவரின் உடல் எடுத்து செல்லப்பட்டு, சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், இன்று நம்மை விட்டு சென்றாலும் அவர் நடித்த படங்கள் மூலம் நினைவில் நிலைத்திருப்பார்.

- Advertisement -

Read more

Local News