Monday, February 10, 2025

ஜாலியா வாங்க, ஜாலியா போங்க… வைரலாகும் NEEK பட ட்ரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்தியூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் டிரைலர் இன்று (பிப்ரவரி 10) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

டிரைலரின் தொடக்கத்தில் தனுஷ், “இது வழக்கமான கதை தான்” என கூறுவது போல் கதையை அறிமுகப்படுத்துகிறார். கதாநாயகன் செப் ஆக வேலை செய்கிறார். அவர் தனது காதலியை மணப்பதற்காக பெற்றோருடன் சென்று பெண் பார்க்கும் சூழ்நிலையும், அவர்களது காதல் தொடரும் விதமும் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. அதே சமயத்தில், கதாநாயகனின் முன்னாள் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் சம்பவமும் முக்கியமானதாக இடம் பெற்றுள்ளது.

காதல், காதல் தோல்வி, நண்பர்களுடனான வேடிக்கையான நிகழ்வுகள் ஆகியவற்றால் டிரைலர் மகிழ்ச்சியுடனும் வண்ணமயமாகவும் அமைந்துள்ளது. டிரைலரின் இறுதியில் மீண்டும் தனுஷ், “ஜாலியா வாங்க, ஜாலியா போங்க” என கூறுவது போல் படம் ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர உள்ள இப்படம், வெளியிடப்பட்ட டிரைலரால் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

Read more

Local News