நடிகை கோவை சரளா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பிரபல காமெடி நடிகையாவார். தமிழில் அண்மையில் கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் பிரபல காமெடி நடிகர் பிரமானந்தத்துடன் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு வெளியான பிரபு தேவா – தமன்னா நடித்த நகைச்சுவை திரைப்படமான அபிநேத்ரி-2க்குப் பிறகு, தெலுங்கில் நடிக்காத கோவை சரளா தற்போது தேவிகா அண்ட் டேனி என்ற வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த தொடரில் ரிது வர்மா முக்கிய கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த வெப்சீரிஸை சுதாகர் சாகந்தி என்பவர் எழுதி இயக்கி தயாரிக்கிறார்.