தளபதி விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்றைக்கு அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதி கோவை வந்துள்ளார். கோவை வந்தவருக்கு விமான நிலையத்திலேயே அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.மேலும் பூத் கமிட்டி கூட்டத்தில் கடல் போல் திரண்ட தொண்டர்களால் அரங்கமே அதிர்ந்தது. இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
