பிரேமலு படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நஸ்லேன். தற்போது அவர் புதிய படத்தில் நடிக்கிறார். அப்படத்துக்கு ஆலப்புழா ஜிம்கானா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரு பாக்ஸர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நஸ்லேன். இதற்காக அவர் தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றிக்கொண்டு முறைப்படி பாக்ஸிங் பயிற்சியும் பெற்றுள்ளார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
