ராகவேந்திராவ் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, அம்ரிஷ்புரி, பேபி ஷாலினி, பேபி ஷாமிலி, கன்னட பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்த ஜகதக வீருடு படம் 1990ம் ஆண்டு மே 9ம் தேதி வெளியானது. அந்தக் காலத்தில் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம். தமிழில் ‘காதல் தேவதை’ என்ற பெயரில் டப்பிங் ஆகி இங்கும் நன்றாகவே ஓடியது.அப்படத்தை 35 வருடங்களுக்குப் பிறகு அதே மே 9ம் தேதி மீண்டும் ரீரிலீஸ் செய்ய உள்ளார்கள். ரீரிலீஸ் செய்யப்படும் சில முக்கிய படங்களுக்கு மீண்டும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதுபோல இந்தப் படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more