சமீபத்தில், தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவின் மேடையில், பிரபல பின்னணி பாடகி சின்மயி இந்தப் படத்தில் இடம்பெற்ற முத்த மழை பாடலை பாடினார். அவர் மேடையில் இந்தப் பாடலைப் பாடியது பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து, பலரும் இந்தப் பாடலை ஏற்கனவே பாடிய தீயின் குரலையும், சின்மயியின் குரலையும் ஒப்பிட்டு, சின்மயிக்கு ஆதரவாக கருத்துகளை வெளிப்படுத்தத் தொடங்கினர். இதனால் தேவையில்லாத ஒரு விவாதம் எழுந்தது.

இதற்கான பதிலாக, சமீபத்தில் சின்மயி கூறியதாவது: அந்த நிகழ்ச்சியில் தீ பங்கேற்கவில்லை. மேலும், இந்தப் பாடலை நான் ஏற்கனவே தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடி இருந்ததால், மாற்றாக இந்த நிகழ்வில் நான் பாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனினும், பலர் எங்களை இருவரையும் ஒப்பிட்டு பேசுவது எனக்கு வருத்தமாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும் அவர் தனது மனநிலையை வெளிப்படுத்தியபோது, தீ தற்போது திறமையுடன் வளர்ந்து வரும் பாடகி. என்னை 16 அல்லது 18 வயதில் இப்படி ஒரு மேடையில் பாடச் சொல்லியிருந்தால், நான் நிச்சயமாக முடியாது என கூறியிருப்பேன். தீ பற்றி சொல்வதானால், அவர் பல சின்மயிகளையும், பல ஸ்ரேயா கோஷல்களையும் வென்றுவிடும் திறமையுடன் இருக்கிறார். அவர் ஒரு மிகப்பெரிய திறமைசாலி” என பாராட்டியும், ஆதரவும் தெரிவித்தார் சின்மயி.