Touring Talkies
100% Cinema

Monday, October 27, 2025

Touring Talkies

பைசன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜையும் துருவ் விக்ரம்-யும் நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் பத்து நாட்களுக்கு முன்பு வெளியான படம் ‘பைசன்’. இப்படம் 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழாவையும் கொண்டாடினார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு, படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், நாயகன் துருவ் விக்ரம் ஆகியோரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். மேலும், எக்ஸ் தளத்தில், “மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!

தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு ‘sharp message’-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள்.

சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக ‘பைசன்’ மிளிர்கிறது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!

இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்!” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து, “என் முதல் படமான பரியேறும் பெருமாளில் ஆரம்பித்து கர்ணன், மாமன்னன், வாழை, இப்போது பைசன் வரை என் மீதும் என் படைப்பின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்து ஆர்வமாய் பார்த்து நேரில் அழைத்து என்னை உச்சிமுகர்ந்து கொண்டாடும் உங்களின் அத்தனை பேரன்பிற்கும் பெரும் பிரியத்திற்கும் என் இதயத்திலிருந்து கசிந்துருகும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா,” என இயக்குனர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News