மார்வெல் காமிக்ஸ் ரசிகர்களின் மனதை வென்ற சூப்பர் ஹீரோவில் முக்கியமானவர் ‘கேப்டன் அமெரிக்கா’. இதுவரை மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம், ‘மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ வரிசையில் ‘கேப்டன் அமெரிக்கா – தி பர்ஸ்ட் அவஞ்சர்’ (2011), ‘கேப்டன் அமெரிக்கா – தி வின்டர் சோல்ஜர்’ (2014), ‘கேப்டன் அமெரிக்கா – சிவில் வார்’ (2016) போன்ற திரைப்படங்களை உருவாக்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ‘தி அவஞ்சர்ஸ்’ (2012), ‘அவஞ்சர்ஸ் – ஏஜ் ஆப் அல்ட்ரான்’ (2015), ‘அவஞ்சர்ஸ் – இன்பினிட்டி வார்’ (2018), ‘அவஞ்சர்ஸ் – என்ட் கேம்’ (2019) ஆகிய படங்களிலும் கேப்டன் அமெரிக்கா முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158524.png)
நாளை, பிப்ரவரி 14ம் தேதி ‘கேப்டன் அமெரிக்கா – பிரேவ் நியூ வேர்ல்டு’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ஜுலியஸ் ஓனா இயக்கியுள்ளார். இதில், கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் ஆண்டனி மாக்கி நடித்துள்ளார். மார்வெல் ரசிகர்கள் இப்படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொடரில், 2024 ஆம் ஆண்டில் ‘டெட்பூல் அண்ட் உல்வெரின்’ திரைப்படம் கடைசியாக வெளியானது. இதற்குப் பிறகு, மே 2ம் தேதி ‘தண்டர்பால்ட்ஸ்’ திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. அவஞ்சர்ஸ் தொடரில் அடுத்ததாக, ‘அவஞ்சர்ஸ் – டூம்ஸ்டே’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டு மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.