தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் பல மொழிகளில் இசையமைத்து மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. சமீபத்தில் லண்டன் சென்று சிம்பொனி இசையமைத்து இசையுலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.அவரது சாதனையை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள், திரையுலகினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் இளையராஜா.அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் பெற்றுள்ளார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
