நடிகர் நானி சமீபத்தில் அளித்த பேட்டியில், முன்பெல்லாம் உடனுக்குடன் கருத்துக்களைத் தெரிவிக்க எந்த ஒரு தளமும் இல்லை. ஆனால், இப்போது சோஷியல் மீடியா வளர்ச்சியால் எங்கு பார்த்தாலும் தடுக்க முடியாத அளவிற்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நீங்கள் தடுக்க முடியுமா? ஏன் தடுக்க வேண்டும் ? ஒரு புதிய படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி நன்றாக இல்லை என்று சொல்லும் வரை ஓகே தான். அதேசமயம் ஒரு படத்தின் முதல் காலை காட்சி முடிந்ததுமே படம் ‘பிளாப்’ என்று விமர்சகர்கள் அறிவிக்கக் கூடாது. ஒரு பத்து நாட்கள் கழித்து படம் ‘பிளாப்’ என்றால் அது ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். அப்போது வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
