தற்போது அமெரிக்காவில் கூலி படத்தின் ஆகஸ்ட் 13ம் தேதிக்கான பிரிமியர் காட்சிகளுக்கான முன்பதிவுடன் ஆரம்பமாகி உள்ளது. ரஜினி நடித்து வெளியாகும் படம் என்றாலே அமெரிக்காவில் அமோக வரவேற்பு இருக்கும். இந்தப் படத்தில் மல்டி ஸ்டார் காம்பினேஷன், லோகேஷ் – ரஜினி முதல் முறை கூட்டணி என பல காரணங்களால் அங்கு முன்பதிவிலும், வசூலிலும் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
